smkteam

இந்தியப் பெருங்கடலில் ஈரான், சீனா, ரஷ்ய நாடுகள் கூட்டுப் பயிற்சி

ஈரான், சீனா, ரஷ்ய நாடுகள் இந்தியப் பெருங்கடலில் வடக்கே கூட்டுப்பயிற்சி மேற்கொண்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

smkteam-9789329125

கடற் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டதாக மூன்று நாடுகளும் விளக்கமளித்துள்ளன.

ஈரானின் 11 கப்பல்களும், மூன்று ரஷ்ய கப்பல்களும், இரண்டு சீன கப்பல்களும் இந்தப் பயிற்சியில் பங்கேற்றனர். இந்தப் பயிற்சியில் இரவு நேரங்களில் எப்படி சண்டையிடுவது, கடலில் மீட்புப் பணியில் எப்படி ஈடுபடுவது போன்ற பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2019 ஆம் ஆண்டிலிருந்து ரஷ்யா, ஈரான், சீனா இணைந்து நடத்தும் மூன்றாவது பயிற்சி இதுவாகும்.

பயிற்சி குறித்து ஈரான் செய்தித் தொடர்பாளர் முஸ்தபா கூறும்போது, “ இந்த கூட்டுப் பயிற்சியின் போது இரவு நேரங்களில் கடற்பரப்பில் உள்ள வீரர்கள் குறி பார்த்துச் சுடுதல், கடலின் நடுவே தீப்பிடித்த போர்க்கப்பலை எப்படி காப்பது, எதிரிகளால் சூழப்பட்ட  கப்பல் மற்றும் அதில் உள்ள வீரர்களை காப்பாற்றுதல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டன.

கூட்டு ராணுவ பயிற்சி தொடர்பாக 3 நாடுகளின் ராணுவ அதிகாரிகள் கூறுகையில், கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்வதே இந்த பயிற்சியின் முக்கிய நோக்கம்.

மேலும் இந்த கூட்டுப் பயிற்சியின் போது, ​​நடுக்கடலில் தீப்பிடித்து எரியும்  போர்க்கப்பலை எப்படி மீட்பது, கடத்தப்பட்ட கப்பலை விடுவிப்பது, இரவு நேர போர் காலங்களில் இலக்குகளை சரியாக எப்படி தாக்குவது போன்ற பல போர் தந்திரங்கள் வீரர்களுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டது என்று தெரிவித்தனர்.

 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *