யூ ஆர் கிரேட்; தல தோனியின் ஆட்டத்திற்கு தலை வணங்கிய ஜடேஜா !!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது.

15வது ஐபிஎல் தொடரின் 33வது லீக் போட்டியில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

மும்பை பட்டீல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ஜடேஜா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. மும்பை அணியில் அதிகபட்சமாக திலக் வர்மா 51* ரன்களும், சூர்யகுமார் யாதவ் 32 ரன்களும் எடுத்தனர்.

இதன்பின் 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய சென்னை அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. மிடில் ஆர்டரில் களமிறங்கிய அம்பத்தி ராயூடு 40 ரன்கள் எடுத்து கொடுத்தாலும் மற்றவர்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடாததால் சென்னை அணியின் வெற்றிக்கு கடைசி 2 ஓவரில் 28 ரன்கள் தேவைஇ என்ற நிலை ஏற்பட்டது.
பும்ராஹ் வீசிய போட்டியின் 19வது ஓவரில் சென்னை அணி 11 ரன்கள் குவிக்க உதவியாக ப்ரெடோரியஸ், கடைசி ஓவரின் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார். இதன்பின் வந்த பிராவோ ஒரு ரன் ஓடியதன் மூலம், சென்னை அணியின் வெற்றிக்கு கடைசி 4 பந்துகளில் 16 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலை ஏற்பட்டது. களத்தில் இருந்த தோனி 1 சிக்ஸர் மற்றும் இரண்டு பவுண்டரிகள் அடித்து மிரட்டியதன் மூலம் கடைசி பந்தில் மும்பையை வீழ்த்திய சென்னை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *