smkteam

Vikram 100th Day : “இத மட்டும் பண்ணுங்க”.. விக்ரம் பட 100வது நாள் விழாவில் ரசிகர்களுக்கு கமல் கோரிக்கை

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில், கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி திரை அரங்குகளில் வெளியாகி இருந்த திரைப்படம் ‘விக்ரம்’.

லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்த இந்த திரைப்படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி, பகத் ஃபாசில் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்திருந்தனர். மேலும், நடிகர் சூர்யாவும் சிறப்பு தோற்றத்தில் தோன்றி இருந்தார்.

 

அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்திருந்த நிலையில், படம் பிளாக்பாஸ்டர் ஹிட்டாகவும் பதிவாகி இருந்தது. அத்துடன், வசூல் வேட்டை நடத்தி இருந்த விக்ரம், தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் நிறைய கலெக்ஷன் சாதனைகளையும் படைத்திருந்தது.

அது மட்டுமில்லாமல், சமீபத்தில் 100 நாட்கள் வெற்றிகரமாக ஓடி அசத்தி இருந்த விக்ரம் திரைப்படத்தின் ஸ்பெஷல் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி இருந்தது. இந்நிலையில், விக்ரம் திரைப்படம் 100 நாள் ஓடியதை கொண்டாடும் விதமாக, கோவை கே.ஜி திரை அரங்கில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில், நடிகர் கமலும் கலந்து கொண்டார்.

இதில் கலந்து கொண்டு பேசிய கமல், “அடையாளம் தெரியாத குழந்தையாக களத்தூர் கண்ணம்மா படத்தில் தோன்றிய போது, போகும் இடங்களில் எல்லாம் நீதானா அந்த பிள்ளை என கேட்பார்கள். அது மிகவும் சந்தோசமாக இருக்கும். ஆனால், ஆரம்ப காலத்தில் நான்கு படங்கள் நடித்த என்னை யாரும் கண்டுகொள்ளவில்லை. 10 பேர் கூட கண்டு கொள்ளவில்லையே என்ற கவலை இருந்தது. அதை மாற்றவும் உழைத்தேன். சினிமாவில் சாதித்தது என்னால் மட்டும் என நினைப்பது முட்டாள்தனம். அதற்கு பல பேர் காரணமாக இருக்கிறார்கள். 63 ஆண்டுகள் என்னை வாழ வைத்தது இந்த சினிமா தான்” என கூறினார்

தொடர்ந்து, ரசிகர்களுக்கு முக்கியமான கோரிக்கை ஒன்றை வைத்த கமல், “நல்ல சினிமாக்களை ஒரு போதும் நீங்கள் கைவிட்டு விடாதீர்கள். ஒரு வெற்றியை அனைவரும் சேர்ந்து கொண்டாடுவது சிறந்த திரைப்படங்களை எடுக்க உத்வேகமாக அமையும். நல்ல நடிகர்களை வாழ்த்துங்கள்” என கேட்டுக் கொண்டார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *