இரு சக்கர வாகன காப்பீடு, வாகனத்தை இழத்தல் அல்லது பல்வேறு காரணங்களால் வாகனத்திற்கு ஏற்படும் சேதங்களுக்குக் காப்புறுதியை அளிக்கிறது.
இந்தக் காப்பீட்டுத் திட்டங்கள் இரண்டு வகைகளின் கீழ் வருகின்றன, அதாவது, விரிவான காப்பீட்டுத் திட்டம் மற்றும் மூன்றாம் தரப்புப் பொறுப்பு காப்புறுதி திட்டம் என்பனவாகும்.
விரிவான காப்பீட்டுத் திட்டம்
ஒரு இரு சக்கர வாகன விரிவான காப்பீட்டுத் திட்டம் ஒருவேளை பின்வரும் எதிர்பாராத சம்பவங்கள் நேர்ந்தால் காப்பளிக்கிறது:
1. விபத்து அல்லது தீ விபத்து, மின்னல் வெட்டு, வெள்ளம் அல்லது நிலநடுக்கம் போன்ற காரணங்களால் வாகனம் ஒரு பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ சேதமடைந்தால் காப்பீடளிக்கிறது.
2. தீங்கிழைக்கும் நோக்கத்துடன் தீவைக்கப்படுதல் அல்லது அந்நியர்களால் வன்முறையில் அழிக்கப்படுதல் அல்லது திருட்டு அல்லது கொள்ளை ஆகிய காரணங்களால் வாகனத்தை இழத்தல் போன்ற காரணங்களால் வாகனம் ஒரு பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ சேதமடைந்தால் காப்பீடளிக்கிறது.
விபத்து 3. விபத்துக் காரணமாக மூன்றாம் தரப்பினரின் சொத்துக்களுக்குச் சேதம் ஏற்படுதல் அல்லது மூன்றாம் தரப்பினரின் உயிருக்கு ஆபத்து மற்றும் அங்கங்களுக்குக் காயங்கள் ஏற்படுதல் போன்றவற்றிற்குக் காப்பீடளிக்கிறது. 4. விபத்துக் காரணமாகக் காப்பீட்டுதாரரின் உயிருக்கு ஆபத்து மற்றும் அங்கங்களுக்குக் காயங்கள் ஏற்படுதல் போன்றவற்றிற்குக் காப்பீடு அளிக்கிறது.
மூன்றாம் தரப்பினருக்கான பொறுப்புக் காப்புறுதித் திட்டம். இரு சக்கர வாகன காப்பீட்டுத் திட்டம் மூன்றாம் தரப்பினருக்கான பொறுப்புக்களுக்கு மட்டும் காப்புறுதி அளித்தால், பின்பு காப்பீட்டு நிறுவனர், மூன்றாம் தரப்பினரின் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கான செலவுகளுக்கு மட்டும் பணம் செலுத்தவும் அல்லது மூன்றாம் தரப்பினரின் உயிருக்கு ஆபத்து மற்றும் அங்கங்களில் ஏற்பட்ட காயங்களுக்குச் சிகிச்சை அளிக்கப் பணம் செலுத்தவும் மட்டுமே பொறுப்புடையவராகிறார்.
