டூவீலர் இன்சூரன்ஸ்
விபத்து, திருட்டு அல்லது இயற்கை பேரழிவுகளின் காரணமாக இரு சக்கர வாகனத்திற்கு அல்லது வாகனத்தில் பயணிப்பவர்களுக்கு ஏற்படும் சேதங்களுக்கு எதிரான நிதி ஆதரவை டூவீலர் இன்சூரன்ஸ் அளிக்கிறது. நீங்கள் விபத்தில் மூன்றாம் தரப்பினரைக் (தர்டு பார்டி) காயப்படுத்தி இருந்தாலோ அல்லது அவரது உடமைகளைச் சேதப்படுத்தினாலோ அதற்கான நிதி செலவுகளை இது கவர் செய்யும். ஒட்டுமொத்தமாக, ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம் உங்களுக்கு நேர்ந்தால் உங்கள் மனதைத் திடமாக வைத்துக் கொள்ள இது உதவுகிறது.
டூவீலர் இன்சூரன்ஸின் அவசியம் ஏன்?
1988 ஆம் ஆண்டில் மோட்டார் வாகனச் சட்டம் ஆனது டூவீலர் இன்சூரன்ஸ் என்ற கருத்தை முன்னிலைப்படுத்தியது. இதன் பின்னணியில் இருக்கும் யோசனை ஆனது மிகவும் எளிமையானது – இந்தியாவில் ஒருவர் சுதந்திரமாக வாகனத்தை ஓட்ட தங்களின் வாகனத்திற்கு குறைந்தபட்சம் மூன்றாம் தரப்பு இன்சூரன்ஸைக் கட்டாயம் வாங்க வேண்டும். நீங்கள் அந்த குறைந்தபட்ச இன்சூரன்ஸ் கூட இல்லாமல் வாகனம் ஓட்டுவது கண்டறியப்பட்டால், அபராதம் செலுத்த வேண்டும் மற்றும் இந்தியச் சட்டத்தின் நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டி இருக்கும். 2019 ஆம் ஆண்டில் மோட்டார் வாகனச் சட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட புதிய திருத்தங்களின்படி, இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுவதற்கு அல்லது காலாவதியான ஓட்டுநர் உரிமத்துடன் ஓட்டுவதற்கும் அதிக அபராதம் விதிக்கப்படுகிறது. எனவே, நீங்கள் நீதிமன்றத்திற்கு அலைந்து திரிந்து, உங்கள் பர்ஸை காலி செய்ய விரும்பவில்லை என்றால் உடனடியாக டூவீலர் இன்சூரன்ஸ் எடுப்பதற்கான சரியான நேரம் இதுவே
